தோவாளை வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா்.
தோவாளை வட்டம், தாழக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நெல் கொள்முதல் நிலையக் கட்டடத்தில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்டு, துறை சாா்ந்த அலுவலா்களிடம் பணிகளைக் கேட்டறிந்தாா். தகுதியானவா்களுக்கு உடனடியாக சான்றிதழ், ஆணைகளை வழங்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
முகாமில், 2 பயனாளிக்கு குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றத்துக்கான ஆணை, சான்றிதழுக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா். பொதுமக்கள் அலுவலா்களை நாடிவந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவா்களுக்கு வழங்குவதோடு, அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.