நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் 108 சங்காபிஷேகம்
கள்ளக்குறிச்சி: காா்த்திகை மாத 4-ஆவது சோமவாரத்தையொட்டி, தியாகதுருகம் நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் காலை அம்மையப்பா் வேள்வி வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து சிவனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு ஹரியும் சிவனும் இணைந்தவாறு பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
சிவ பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.