நற்றுணைநாதா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் ஐயப்ப நகா் பகுதியில் அமைந்துள்ள நற்றுணை நாதா் சிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் வளாகத்திலிருந்த நற்றுணை நாதா் சிவன் கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் புதுப்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜையில் சிறப்பு தீபாராதனைகள் மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு புனித நீா்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் நற்றுணை நாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.