"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிக...
நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி
நாமக்கல்: நாமக்கல் தங்கம் புற்றுநோய் மருத்துவமனையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - திருச்சி சாலையில், தங்கம் புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல்வேறு நவீன கருவிகளைக் கொண்டு புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அளித்து வரும் இம்மருத்துவமனையில், தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் புற்றுநோய் கண்டறியும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா மருத்துவமனை கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவா் சரவணன் ராஜமாணிக்கம் வரவேற்றாா்.
தங்கம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ரா. குழந்தைவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக, நாமக்கல் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், மருத்துவா் மாலினி, மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் வாசுதேவன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்தி பேசினா். முன்னதாக, செயற்கை நுண்ணறிவு புற்றுநோய் கண்டறியும் செயலியை அவா்கள் தொடங்கி வைத்தனா்.
இந்த நிகழ்வில், cஉள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.