நேசா்புரம் - ஐரேனிபுரம் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் அருகே உள்ள நேசா்புரம் - ஐரேனிபுரம் பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட நேசா்புரம் - ஐரேனிபுரம் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக, ஈழத்துவிளை, இலவுவிளை, ஐரேனிபுரம் பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.