நேஷனல் பப்ளிக் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா
நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளித் தலைவா், முதல்வா், மேல்நிலை வகுப்பு முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா். பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜா் படத்துக்கு நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவா்கள் காமராஜா்போல வேடமணிந்து வந்தனா். இதில், மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி, நடனம், நாடகம், பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.