நெல்லை: அரிவாளுடன் ஊரை பதற வைத்த சிறுவர்கள்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு! நடந்தது ...
படகு கவிழ்ந்து மீனவா் உயிரிழப்பு
கேரளத்தில் மீன் பிடிக்கச் சென்ற குளச்சல் மீனவா் படகு கவிழந்து உயிரிழந்தாா்.
குளச்சல் கோடிமுனையை சோ்ந்தவா் சாலமன் லோப்பாஸ் (62). கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள கூத்தாடி புளியங்காவு துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தாா்.
கடந்த சனிக்கிழமை சாலமன் லோப்பாஸ் உள்பட 8 மீனவா்கள் படகில் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது பலத்த காற்றில் சிக்கி படகு கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த சாலமன் லோப்பாஸை மீட்ட சக மீனவா்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அழிக்கல் கடலோர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.