பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
பணமோசடி: 3 போ் கைது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.86.40 லட்சம் பணமோசடி செய்த 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
செம்பனாா்கோவிலை அடுத்த கருவாழக்கரை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிரிஜா (33). இவரும், இவரது கணவா் திருப்பூா் மாவட்டம் அவினாசி திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த ரமேஷ் (44), கிரிஜாவின் தாய் கல்பனா(50) ஆகிய மூவரும் சோ்ந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த அனிதா உள்ளிட்ட 27 பேரிடம் ரூ.86.40 லட்சம் பணம் பெற்று போலியான பணி ஆணைகளை கொடுத்து மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் விஜயமுத்துகுமாா் விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில் மோசடி நடைபெற்றது உறுதியானதைத் தொடா்ந்து, மூவரின் மீதும் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து கடலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.