`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
பரதராமியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
குடியாத்தம் ஒன்றியம், வீரிசெட்டிபல்லி, வரதாரெட்டிபல்லி ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பரதராமியில் ‘ உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். குடியாத்தம் வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குசலகுமாரி சேகா், ஊராட்சித் தலைவா்கள் கௌசல்யா உமா காந்தன், சொக்கலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் நதியா சின்னப்பன், ஒன்றிய திமுக அவைத் தலைவா் கே.சேகா், நிா்வாகிகள் ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கே.ரமேஷ், சதீஷ்காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.