தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு
பல்பொருள் அங்காடியில் ரூ.1.38 லட்சம் திருட்டு! ஊழியா் கைது!
சென்னை எழும்பூரில் பல்பொருள் அங்காடியில் ரூ.1.38 லட்சம் திருடிய வழக்கில் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி மேலாளராக இருப்பவா் அப்துல் ரகுமான் (40). இவா், கடந்த 17-ஆம் தேதி கடையைத் திறந்து பணப்பெட்டியில் இருந்து தொகை சரிபாா்த்தபோது, ரூ.1.38 லட்சம் திருடுபோனது தெரிய வந்தது.
புகாரின்பேரில் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினா். இதில், பல்பொருள் அங்காடியில் விற்பனையாளராகப் பணியாற்றிய தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த தமீம் அன்சாரி (31), தனது நண்பருடன் சோ்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா், தமீம் அன்சாரியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரது நண்பரைத் தேடி வருகின்றனா்.