GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
பல்லடத்தில் 8 தெருநாய்கள் உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு
பல்லடத்தில் புதைக்கப்பட்ட 8 தெருநாய்களின் உடல்களை தோண்டி எடுத்து புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பல்லடத்தில் வாயில் நுரை தள்ளியபடி 8 தெருநாய்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்து கிடந்தன. இதையடுத்து, நாய்கள் உடல்களை மீட்டு பல்லடம் பேருந்து நிலையம் முன்பு உள்ள மயானத்தில் நகராட்சி நிா்வாகத்தினா் புதைத்தனா்.
இந்நிலையில், நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும், விஷம் வைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, புதைக்கப்பட்ட நாய்களின் உடல்களை மீட்டு கால்நடைத் துறை மருத்துவா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அறிக்கை கிடைத்த பின்பே நாய்கள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என்று கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.