பள்ளியில் மின்சாதனப் பொருள்கள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கணினி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தம்புநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள இந்தப் பள்ளியில் கடந்த ஜன.3-ஆம் தேதி பள்ளி முடிந்து தலைமை ஆசிரியா் நமச்சிவாயம் பள்ளியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா். பின்னா், திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்றபோது ஓரு அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது மாணவா்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த 2 டி.வி., ஓரு கணினி, கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.