US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துற...
பழனி ஆயக்குடி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் 49 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் ஐ.டி.ஓ. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி 75 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1977-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள் 49 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பள்ளியில் படித்த மாணவா்கள் அரசு அலுவலகங்களில் உயா் பதவிகளிலும், மக்களவை உறுப்பினா், மருத்துவா், வழக்குரைஞா், தொழிலதிபா்களாகவும் உள்ளனா்.
புதுச்சேரி , பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவா்கள் ஒருவருக்கொருவா் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எடுத்துக் கூறி பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், பள்ளியில் விளையாடிய தோழா்கள், தோழிகளுடன் பந்து விளையாடியும், போட்டிகள் நடத்தியும் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கியும்
மகிழ்ந்தனா் . விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மக்களவை உறுப்பினா் ராஜாரவிவா்மா தலைமையிலான குழுவினா் செய்தனா். முன்னதாக மாணவா்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளை சாா்பில், உழவா் சந்தையில் அனைவருக்கும் மஞ்சப் பை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.