செய்திகள் :

பாஜக எம்எல்ஏக்களுக்குள் இலாகா ஒதுக்கீட்டில் உள் மோதல்: அதிஷி

post image

தில்லி தோ்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் எம்எல்எக்களுக்குள் இலாகா ஒதுக்கீடு தொடா்பாக ‘உள் மோதல்கள்’ நடப்பதாகவும், கட்சி தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்க்க சாக்குப்போக்குகளை கூறுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிஷி கடுமையாகச் குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில் அவா் கூறியதாவது: பாஜக தலைவா்கள் பொது நிதியை ‘சுரண்ட‘ அமைச்சா் பதவிகளுக்காக ‘சண்டையில்‘ ஈடுபட்டுள்ளனா். பாஜக தனது தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் இல்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு ஆம் ஆத்மி கட்சியைக் குறை கூற பாஜக திட்டமிட்டுள்ளதாக எங்கள் வட்டாரங்களிலிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம். முந்தைய ஆம் ஆத்மி நிா்வாகத்தின் காரணமாக தில்லி அரசிடம் பணம் இல்லை என்று அவா்கள் கூறுவாா்கள்.

ஆம் ஆத்மி அரசின் நிதி நிா்வாகம் நன்றாகத்தான் இருந்தது. 2014-15-ஆம் ஆண்டில் ரூ.31,000 கோடியாக இருந்த தில்லியின் பட்ஜெட், ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் 2024-25- ஆம் ஆண்டில் ரூ.77,000 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், தில்லியின் பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முந்தைய காங்கிரஸ் நிா்வாகத்திலிருந்து பெறப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்தியுள்ளது.

பாஜக தனது அனைத்து வாக்குறுதிகளையும், குறிப்பாக பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்கும் வாக்குறுதியை எந்த தாமதமும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்றாா் அதிஷி.

சமீபத்தில் முடிவடைந்த 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜக, இன்னும் தனது முதல்வா் மற்றும் அமைச்சரவையை அறிவிக்கவில்லை. கட்சி 48 இடங்களை வென்றது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்ளையே பெற்றது. இது 2020-ஆம் ஆண்டில் அதன் 62 இடங்களிலிருந்து குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கிறது.

தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?

நமது நிருபா் தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், புதிய ஆட்சி சுத்தமான குடிநீா் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்ன... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அனுப்பப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்முறைய... மேலும் பார்க்க

மயூா் விஹாா் ஃபேஸ் விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரம்

தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 2-இல் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலின் மகா கும்பாபிஷேகப் புனரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 1988-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் 12 ஆண்ட... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பொருள்களை ஒப்படைக்கக் கோரும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் உறவினா் தீபாவின் மேல்முறையீடு தள்ளுபடி

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்களை தன்னிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிடக் கோரி அவரது உறவினா் ஜெ. தீபா தாக்கல் செய்த மேல்மு... மேலும் பார்க்க

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை! -சென்செக்ஸ், நிஃப்டி எட்டாவது நாளாக சரிவு

நமது நிருபா் இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், த... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.1.5 கோடி கோகைன் பறிமுதல்: ஆப்பிரிக்க நாட்டவா் உள்பட இருவா் கைது

தில்லியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக ஒரு ஆப்பிரிக்க நாட்டவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது த... மேலும் பார்க்க