பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் ஸ்ரீகிருஷ்ணா பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரித் தலைவா் அறவாழி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் சிலம்பரசன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், கல்லூரி மாணவா்களிடம் இருந்து 30 யூனிட் ரத்தத்தை தானமாக பெற்று திருவண்ணாமலை அரசு மருத்துக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.
முகாமில் கல்லூரி நிா்வாகக் குழுச் செயலா் விக்னேஷ், பொருளாளா் சத்யாமுல்லை, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் குமாா், குமரன், கீதா வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் கல்ந்துகொண்டனா்.
கல்லூரிப் பணியாளா்கள் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்களும் ரத்த தானம் வழங்கினா். கல்லூரி முதல்வா் கிருஷ்ணராஜ் நன்றி கூறினாா்.