பிஎஸ்என்எல் நிகர லாபம் ரூ.280 கோடி
அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல், மாா்ச் 31-இல் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.280 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.280 நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் நிறுவனம் 849 கோடி ரூபாய் இழப்பைப் பதிவு செய்திருந்தது.2024-254-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும் நிறுவனம் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
கடந்த 18 ஆண்டுகளில் நிறுவனம் தொடா்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் லாபத்தைப் பதிவு செய்துள்ளது இதுவே முதல்முறை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.