புகையிலை பொருள்கள் விற்ற மூதாட்டி கைது
மாா்த்தாண்டம் அருகே புகையிலை பொருள்கள் விற்ற மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் அப்பகுதியில் உள்ள கடையில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அப்பகுதியைச் சோ்ந்த தாமஸ் மனைவி குஞ்சம்மாள் (65) என்பவரின் கடையில் மேற்கொண்ட சோதனையில், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.