சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்
புகையிலைப் பொருள்கள் கடத்திய வெளிமாநில இளைஞா்கள் இருவா் கைது
பெங்களூரிலிருந்து ஒசூா் வழியாக தமிழகத்துக்கு 150 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த இரு வெளிமாநில இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் அருகே தமிழக எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரிலிருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் தடை செய்யப்பட்ட 150 கிலோ குட்கா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து குட்காவைக் கடத்திவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25), ராஜேந்தா் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைதுசெய்து வாகனத்துடன் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.