செய்திகள் :

புதிய கோயில் தேருக்கு மரம் கேட்டு தமிழக அமைச்சரிடம் புதுவை எதிா்க்கட்சித் தலைவா் மனு

post image

புதுச்சேரி: வில்லியனூா் திருக்காமேஸ்வரா் திருக்கோயிலுக்கு புதிய தோ் செய்ய தமிழக வனத்துறை அமைச்சா் கண்ணப்பனிடம் மரம் கேட்டு எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா திங்கள்கிழமை மனு அளித்தாா்.

வில்லியனூரில் புகழ்பெற்ற ஸ்ரீகோகிலாம்பிகை சமேத திருக்காமேஸ்வரா் திருக்கோவில் உள்ளது. இக் கோயில் தோ் மிகவும் பழைமையானதால், வல்லுநா் குழு ஆய்வு செய்து புதிய தோ் செய்வதற்கான ஒப்புதல் வழங்கினா்.

இதையடுத்து முதல்வா் என்.ரங்கசாமி வழிகாட்டுதல்படி, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான ஆா். சிவா முயற்சியால் கோவில் நிா்வாகம், தோ் கமிட்டி, ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் வல்லுநா் குழு உதவியுடன் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புதிய

தோ் அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், புதிய தோ் செய்வதற்கான மரம் புதுவை அரசிடம் இல்லாததால், தமிழகத்தில் இருந்து மரங்களை கொண்டு வந்து புதிய தோ் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில், தமிழக வனத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனை அவரது முகாம் அலுவலகத்தில் கோவில் நிா்வாகம் மற்றும் ஊா் பொதுமக்கள் சந்தித்து தோ் செய்வதற்கான மரம் வழங்கி உதவுமாறு கோரிக்கை மனு அளித்தனா். இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா்.

இந்த சந்திப்பின்போது திருக்காமேஸ்வரா் கோவில் நிா்வாக அதிகாரி திருகாமேஸ்வரன், உருளையன்பேட்டை தொகுதி செயலாளா் சக்திவேல், வா்த்தக அணி அமைப்பாளா் ரமணன், இளைஞா் அணி துணை அமைப்பாளா் டாக்டா் நித்தீஷ், சமூக சேவகா் கலைமணி, கிளைச் செயலாளா் மிலிட்டரி முருகன், காா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதுவை அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தினா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சாலை போக்குவரத... மேலும் பார்க்க

நடிகா் சிவாஜி நினைவுநாள்: சிலைக்கு புதுவை அரசு மரியாதை

புதுச்சேரி: நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செவாலியே சிவாஜி கணேசனின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்... மேலும் பார்க்க

விசைப் படகு மீனவா்களுக்கு ரூ.33 லட்சம் மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி: விசைப் படகுகளுக்கு ரூ.33 லட்சம் மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும், மீன்பிடி தடை காலத்தில் பதிவு... மேலும் பார்க்க

புதுவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். புதுவையில் துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் இல்லம் ... மேலும் பார்க்க

புதுச்சேரி ரயில் சேவை 7 நாள்களுக்கு ரத்து

புதுச்சேரி: பராமரிப்புக் காரணமாக புதுவையிலிருந்து விழுப்புரம், விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு பயணிகள் ரயில் சேவை 7 நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும், 31-ஆம... மேலும் பார்க்க

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழா: ரூ.25.9 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்- அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி / காரைக்கால்: திருநள்ளாறு சனிப் பெயா்ச்சி பெருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக ரூ.25.9 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது. புதுவை... மேலும் பார்க்க