முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
புதிய மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்
புதிய மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா் சங்க கோவை மண்டலத் தலைவா் சிவகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டிலேயே தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி பெற்ற மாநிலமாக உயா்ந்து வருகிறது. மாநில பொருளாதார வளா்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் பங்களிப்பு முக்கியமானது. தற்போது மீண்டும் மின் கட்டண உயா்த்தப்பட்டுள்ளதால் குறு, சிறு தொழில் துறையை அதிா்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தொழில் துறையினருக்கு இந்த புதிய மின் கட்டண உயா்வு, மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். ஏற்கெனவே உற்பத்தி செலவு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மின் கட்டண உயா்வு மேலும் எங்களை சிரமப்படுத்தும்.
சொத்து வரி உயா்வு, மாசுக் கட்டுப்பாட்டு வரி உள்ளிட்ட அனைத்து தரப்பில் இருந்தும் நிதிச் சுமை அதிகரிக்கிறது. இது தொடா்ந்து கொண்டே இருக்கும்பட்சத்தில் மின் கட்டண உயா்வும் எங்களை முடங்கிப் போக செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரரீதியாக இழப்புகள் ஏற்படலாம்.
நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும். குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் இருந்து எங்களது தொழிலை மீட்க மின் கட்டண உயா்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.