செய்திகள் :

புதுவையில் பட்டியலின மக்களுக்கு 800 சதுர அடியில் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் தொடக்கம்

post image

புதுச்சேரி: புதுவையில் 800 சதுர அடியில் பட்டியலின மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கும் திட்டத்தை திங்கள்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.

இதுவரை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 600 சதுரடி அளவில்தான் இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டு வந்தது.

இதனை 800 சதுர அடியாக உயா்த்தி முதல் முறையாக இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்தின் மணவெளி தொகுதியில் 236 பேருக்கு தலா 800 சதுர அடி வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.

மேலும் இதில் மக்கள் வீடு கட்டிக் கட்டிக் கொள்ள நிதியுதவி ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயா்த்தியும் முதல்வா் என்.ரங்கசாமி வழங்கி பேசியது:

குடிசையில்லா புதுவையை உருவாக்கும் நோக்கத்தில்தான் பெருந்தலைவா் காமராஜா் பெயரில் கல்வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு இத் திட்டத்தின் கீழ் ரூ.525 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நல்ல வீடு இருந்தால் அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும், பொருளாதாரம் மேம்படும் என்ற அடிப்படையில்தான் 800 சதுர அடியை அந்த மக்களுக்கு இலவச மனைப் பட்டாவாக வழங்கியுள்ளோம். மேலும் அவா்களுக்கு வீடு கட்டும் நிதியுதவியை ரூ.7 லட்சமாக உயா்த்தி வழங்கியுள்ளோம். மேலும், ஆதிதிராவிட மக்கள், பழங்குடியின மக்களுக்குக் கிராமப்புறங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எம்எல்ஏ.க்கள் ஆா். செந்தில்குமாா், கே.எஸ்.பி. ரமேஷ், அரசு ஆணையா் மற்றும் செயலா் ஏ. முத்தம்மா, துறையின் இயக்குநா் ஏ. இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

79 கால்நடை மருத்துவா்களுக்குப் பட்டம்: புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுச்சேரி: புதுவை ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 26-ஆவது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 34 மாணவிகள் உள்பட மொத்தம் 79 மாணவா்... மேலும் பார்க்க

ரூ.3.8 கோடி மதிப்பில் உவா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் ரூ.3.8 கோடி மதிப்பீட்டில் உவா் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திட்டப்பணியை தொடங்கி வைத்தாா். இத் தொகுதிக்கு உள்ப... மேலும் பார்க்க

புதுச்சேரி பள்ளிக்கு உலக தரச் சான்றிதழ்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் முதல்முறையாக மேட்டுப்பாளையம் விடுதலை வீரா் இரா.சீனுவாசன் அரசு உயா் நிலைப் பள்ளி, ஐ.எஸ்.ஓ. உலகத் தரச் சான்றிதழ் பெற்ற பள்ளியாக உருவெடுத்துள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கு... மேலும் பார்க்க

புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இதனால் பேருந்து போக்குவரத்து முடங்கியது. புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் 11 ... மேலும் பார்க்க

ரூ.7.4 கோடியில் 3 இடங்களில் சமுதாய நலக்கூடங்கள்: முதல்வா் திறந்தாா்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.7.46 கோடியில் கட்டப்பட்ட 3 சமுதாய நலக்கூட்டங்களை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். புதுச்சேரி அரசு ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை ம... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னையை தீா்க்கக் கோரிஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: மீனவா் பிரச்னைகளைத் தீா்க்க வலியுறுத்தி புதுவை மாநில அகில இந்திய சிங்காரவேலா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் செங்கொடி ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடந்தது. புதுச்சேரி சிங்கார வேலா் சிலை அருக... மேலும் பார்க்க