தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:
மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில், ஞானம் நகா், தளவாய்ப்பாளையம், புறவழிச்சாலை, சித்தா்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூா், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகா், கோரிக்குளம் புதுத்தெரு, பாரதிதாசன் நகா், தில்லைநகா், பனங்காடு, எடவாக்குடி, யாகப்பா சாவடி, அம்மாகுளம், ஆனந்த் நகா், பரிசுத்தம் ஜேம்ஸ் நகா், சூரக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.