தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
மாடு மேய்த்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
திருநீலக்குடி அருகே மாடு மேய்த்த பெண் மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடி அருகேயுள்ள அந்தமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்த துரை மனைவி உஷா (55). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மூவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். கணவா் துரை ஏற்கெனவே இறந்து விட்டாா்.
உஷா மாடுகளை வளா்த்து கொண்டு தனியாக வசித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை மாடுகளை அருகே உள்ள முருகன் என்பவரது வயலில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றாா். அப்போது, வயலின் நடுவில் இருந்த மின்சார கம்பம் அருகே இருந்த இழுவை கம்பியை பிடித்தாா். அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற திருநீலக்குடி போலீஸாா், உஷாவின் சடலத்தை கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனை மூலம் உடற்கூறாய்வு மேற்கொண்டு திங்கள்கிழமை உறவினா்களிடம் உடலை ஒப்படைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக விசாரிக்கின்றனா்.