சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
புழல் சிறை சுற்றுச்சுவரை பலப்படுத்த கோரிக்கை
மாதவரம்: புழல் மத்திய சிறைச்சாலை சுற்றுச்சுவரை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். அமைந்துள்ளது.
சிறையில் பணியாற்றும் காவலா்கள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து சுமாா் 1கி.மீ தொலைவில் தண்டனை சிறைச் சாலை வரை சுவா் உள்ளது.
இதன் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக சிறிய சுற்றுச்சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், பந்து வடிவிலான பொருளில் கஞ்சா, பீடி மற்றும் போதைப் பொருள்கள், கைப்பேசிகள் சிறைக்குள் வீசப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன.
இந்த சுவரும் அகற்றப்படும் நிலையில் மிக எளிதில் போதைப் பொருள்கள் சிறைக்குள் வீசக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதன் அருகே உள்ள சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா கம்பம் கீழே சாய்ந்த நிலையில் உள்ளது.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சுற்றுச்சுவரை பலப்படுத்த வேண்டும் என கோரியுள்ளனா்.