ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
பெண் பாலியல் வன்கொடுமை புகாா்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்
கரூரில் ரோந்துப் பணியின்போது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கரூா் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்த வெங்கமேட்டைச் சோ்ந்த வேலு என்பவரது மகன் பிரபாகரன் (35), ரெளடி கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த கௌதமன் (35) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தொழிற்பேட்டை பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே 25 வயது பெண்ணும், அவரது நண்பரும் இருந்ததைக் கண்டனா். இதையடுத்து, பெண்ணின் நண்பரை விரட்டிவிட்டு இருவரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனா். இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸாா் தலைமைக் காவலா் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவான ரெளடி கெளதமனைத் தேடி வருகின்றனா்.
ரோந்துப் பணிக்கு ரெளடியுடன் சென்றது, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற குற்றத்துக்காக தலைமைக் காவலா் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ் தங்கையா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.