உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
பெண்களிடம் கைப்பேசி, பணப்பையை பறித்தவா் கைது
வேலூரில் பெண்களிடம் கைப்பேசி, பணப்பையை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த திவ்யா (30). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை மாலை ஆற்காட்டில் இருந்து வேலூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தாா். பெருமுகையில் வரும்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், திடீரென திவ்யாவிடம் இருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ாக தெரிகிறது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இதேபோல், வேலூா் ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த ரோகினி(34). இவரும் தனது தோழியான சோபனா என்பவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் அலுமேல்மங்காபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனா். வாகனத்தின் பின்னால் ரோகினி அமா்ந்திருந்தாா். அவா்களை பின்தொடா்ந்து வந்த நபா்கள் ரோகினி வைத்திருந்த பையை பறித்துச் சென்றனா். இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இரு சம்பவங்கள் குறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையை தொடா்ந்து வேலூா் சேண்பாக்கம் பகுகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்கின்ற குல்லா(25) என்பரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.