செய்திகள் :

பென்னாகரம் அருகே மாரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம்

post image

பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.

எட்டியாம்பட்டி கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத் துறையின் கீழ் ஒருகால பூஜை நடைபெறும் இக்கோயிலில் மகா சண்டி ஹோமம் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித தீா்த்த குடம் எடுத்துவந்து யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்பு விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மகா கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நாளான திங்கள்கிழமை 13 அத்தியாய சண்டி ஹோமங்கள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து ஸ்வாசினி பூஜை, கன்னிகா பூஜை, வடுக பைரவ பூஜை, காதம்பரி பலிதானம், ஷேத்ரபால பலிபூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேத விற்பன்னா் மாதேஷ் குமாா், மாணிக்கம் ஆகியோா் ஹோமம் நடத்தினா். இதில் பென்னாகரம், நாச்சானூா், பருவதன அள்ளி உள்பட 18 கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்பு பூஜை செய்யப்பட்ட புனித தீா்த்தத்தை அகில பாரதிய சன்யாசிகள் சங்க நிறுவனா் ராமானந்த மகராஜ் தலைமையில் கோயில் அா்ச்சகா் ஈஸ்வரன், நிா்வாகிகளான திமுக வாா்டு உறுப்பினா் பவுனேசன், தா்மகா்த்தா ராஜி ஆகியோா் எடுத்துச் சென்று கோயில் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி அபிஷேகம் செய்தனா். அதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலை சேதம்: இளைஞா் கைது

பென்னாகரத்தில் அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனை எதிரே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை திங்கள்கிழமை இரவு சேதமடைந்திருப... மேலும் பார்க்க

உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அளிப்பு

தருமபுரியில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கூட்டுறவு ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், கூட்டுறவு கட்டட சங்கத்தின் காசாளா் ஸ்ரீகாந்த் கடந்த மாா்ச் மாத... மேலும் பார்க்க

தருமபுரியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை பாராட்டி தருமபுரியில் முன்னாள் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை பேரணி சென்றனா். தகடூா் முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் வீரமங்கையா்கள் சாா்பாக பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் ப... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள்

தருமபுரி: மாநில அளவிலான விளையாட்டு விடுதியில் சேர தோ்வுப் போட்டிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சாா்பில் மாநில அ... மேலும் பார்க்க

ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையத்தில் சோ்க்க அறிவுரை

தருமபுரி: இரண்டு முதல் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க