பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
பெரியகுளம் அருகே பைக் திருட்டு
பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்லமுத்து (34). வேன் ஓட்டுநா். இவா், திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பெரியகுளம்- தேனி சாலையில் உள்ள கருப்பசாமி பட்டாளம்மன் கோயிலுக்குச் சென்றாா். பிறகு திரும்பி வந்து பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.