வெளிமாவட்டங்களில் வரவேற்பு இல்லாத அரசு குளிா்சாதனப் பேருந்துகளை சென்னையில் இயக்க...
பெருமாள் கோயில் திருப்பணிக்கு உதவ அமைச்சரிடம் கோரிக்கை
வெள்ளக்கோவில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணிக்கு உதவ தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் ஏ.எம்.சி. செல்வராஜ் தலைமையில் அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மூலனூா் சாலையில் அறநிலையத்துக்குச் சொந்தமான 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில் கடந்த 33 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. மிகவும் பழுதடைந்து மழைக் காலங்களில் வெள்ள நீருடன் கழிவுநீா் கோயிலுக்குள் புகுந்து வந்தது. இந்நிலையில் திருப்பணி வேலைகள் செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படும் நிலையில் அரசு உதவி, உபயதாரா்கள் உதவி தவிர மீதி நிதியை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் பகுதியில் பல்வேறு பொது நலப் பணிகளை மேற்கொள்வதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு 16 நபா்களின் பெயரில் வங்கிகளில் போடப்பட்டுள்ள ரூ. 1 கோடிக்கும் அதிகமான டெபாசிட் தொகையை, பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு வழங்க அமைச்சா் பரிந்துரை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.