பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
பொது இடத்தில் குப்பை கொட்டிய பனியன் நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பொது இடத்தில் குப்பைக் கொட்டிய தனியாா் பனியன் நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 25-ஆவது வாா்டு சிறுபூலுவபட்டி சுற்றுச்சாலையில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் உள்ள குப்பைகளை பொது இடத்தில் கொட்டப்பட்டிருப்பதாக புகாா் வந்திருந்தது.
இதையடுத்து அந்த இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு முரணாக பொது இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.