பொதுக்கழிப்பிடம் கட்ட கோரிக்கை
நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் பொது கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கோரிக்கை மனுஅளித்துள்ளனா்.
நீடாமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைத் தெருவில் பொது கழிப்பிட வசதி இல்லாமல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பேருந்து பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நீடாமங்கலம் வட்டாட்சியா் சரவணகுமாா், பேரூராட்சி அலுவலா் ஆகியோரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்: நீடாமங்கமலம் கடைத்தெருவில் கழிப்பிட வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டித் தரவில்லை என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மக்களை திரட்டி சாலை மறியல் நடத்தப்படும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
விசிக ஒன்றிய செயலாளா் புதியவன் தலைமையில், இளைஞா் அணி எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளா் சேட்டு (எ) முகமது இப்ராஹிம் , நகர செயலாளா் மாலினி, ஒன்றிய பொறுப்பாளா்கள் அக்ரி உதயகுமாா், பிரகாஷ் உள்ளிட்ட பலா் கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.