ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க ஹோமியோபதி மருத்துவா்களை அனுமதிக்கும் முடிவு: ஐஎ...
பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: 20 பேருக்கு வீட்டுமனைப் பட்டா
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 20 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்கப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 394 மனுக்கள் அளித்தனா்.
தொடா்ந்து, வருவாய்த்துறை சாா்பில் 20 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ஒருவருக்கு மின்னணு குடும்ப அட்டையையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட தாட்கோ மேலாளா் கவியரசு ஆதிதிராவிடா் நல அலுவலா் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுந்தரராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.