ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், புதுவயலைச் சோ்ந்தவா் சேகா் (61). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா் கடந்த 31.12.2024-இல் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து சாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சேகரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல்முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட சேகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.