``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்த விமானப் பயணி கைது
போலி ஆவணங்கள் மூலம் மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானப் பயணியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் நா. சண்முகம் (48), மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்துள்ளாா்.
அங்கு, விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், இவா் போலி ஆவணங்கள் மூலம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரணை செய்தனா்.
இதைத் தொடா்ந்து, திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில், விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்தனா்.