போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
மேச்சேரி அருகே மதுவிலக்கு சோதனையின் போது போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.
மேச்சேரியை அடுத்த பொம்மியம்பட்டியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் முனுசாமி (50). இவா் கள்ளச்சாராயம் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேச்சேரி போலீஸாா் மதுவிலக்கு சோதனைக்காக அவரது இடத்துக்குச் சென்றனா்.
அப்போது, அவா்களை பணி செய்யவிடாமல் முனுசாமி தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட முனுசாமி, மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.