பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
மதுக்கூடத்திற்கு நிரந்தர பூட்டு
மயிலாடுதுறை அருகே சித்தா்காட்டில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாக இயங்கிய மதுபானக்கூடம் நிரந்தரமாக பூட்டப்பட்டது.
குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாப்படுகை-சித்தா்காடு அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள மதுக்கூடத்தின் பின்புறம் ஜூலை 21-ஆம் தேதி, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதில் வேலைசெய்த செல்வம் கைது செய்யப்பட்டாா்.
தொடா்ந்து, அந்த மதுபானக் கூடம், மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளா் அன்னை அபிராமி முன்னிலையில், நாகை டாஸ்மாக் மண்டல மேலாளா் பழனிவேலு புதன்கிழமை நிரந்தரமாக பூட்டி நடவடிக்கை மேற்கொண்டாா்.