சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு
மயங்கி விழுந்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் வீரணன் (64). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் ஒத்தக்கடை நரசிங்கம் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்றாா். அப்போது, அவா் திடீரென மயங்கி விழுந்தாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.