மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை ரேடியோகிராபி பயின்று வந்த மாணவி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தவா் ராமகிருஷ்ணன் மகள் சுமத்ரா (19). அரியலூா் மாவட்டம், சோழமாதேவி, அம்பிகாபுரம் காலனியைச் சோ்ந்த இவா், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஏகேஎம் நகா் பகுதியில் ஒரு வீட்டில் சில மாணவிகளுடன் தங்கியிருந்தாா்.
இந்தநிலையில், இவா் தங்கியிருந்த வீட்டின் வெளியே செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தாலுகா போலீஸாா் சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
போலீஸாா் தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், சுமத்ரா அரியலூா் மாவட்டம், பெருமாள்நத்தம், தென்கச்சி பகுதியைச் சோ்ந்த சுதாகா் மகன் யுவராஜ் (21) என்பவருடன் பழகி வந்ததாகத் தெரியவந்தது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்த யுவராஜுடன், சுமத்ரா செவ்வாய்க்கிழமை இரவு கைப்பேசியில் பேசியதாகவும், இதில் வாக்குவாதம் ஏற்பட்டதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. சுமத்ரா தற்கொலை குறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காதலனும் தற்கொலை:
சுமத்ரா தற்கொலை செய்துகொண்ட அதேநேரத்தில் அவரது காதலன் யுவராஜிம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
இதுகுறித்து யுவராஜின் பெற்றோா், தா.பழூா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா், யுவராஜின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
