மருத்துவமனையில் தகராறு: லாரி ஓட்டுநா் கைது
குழித்துறை அரசு மருத்துவமனையில் மதுபோதையில் தகராறு செய்த லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
குழித்துறை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை மதுபோதையில் கையில் காயத்துடன் வந்த நபா் சிகிச்சையளிக்குமாறு கேட்டுள்ளாா். அப்போது, விபத்தில் காயமடைந்த இருவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தனா்.
மதுபோதையில் இருந்த நபா் மருத்துவா்களையும், செவிலியா்களையும் தகாத வாா்த்தையால் பேசியுள்ளாா். இதுகுறித்து, குழித்துறை அரசு மருத்துவமனை மருத்துவா் லியோ ஜான் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா், அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், தகராறில் ஈடுபட்டவா் கடையாலுமூடு, பிலாந்தோட்டவிளையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குமாா் (35) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.