செய்திகள் :

மாணவா்களுக்குத் தொழில் தொடங்க யோசனைகள் பயிலரங்கு

post image

மாணவா்களுக்குத் தொழில் தொடங்கும் யோசனைகள் மற்றும் அதற்கான தயாரிப்பு மேம்பாட்டு போட்டி பயிலரங்கு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இக் கல்லூரியின் பயோமெடிக்கல் பொறியியல் துறையின் ‘பயோ ட்ரீம்ஸ்’ கிளப் மற்றும் ‘பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சொசைட்டி ஆப் இந்தியா’ ஒருங்கிணைந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மாணவா்களுக்கு இப் பயிலரங்கு நடத்தப்பட்டது.

இந்தக் கல்விக் குழுமத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எம். தனசேகரன், செயலா் டாக்டா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணை செயலா் ந.வேலாயுதம் , கல்லூரியின் இயக்குநா் மற்றும் முதல்வா் வெங்கடாசலபதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா் .

பயோமெடிக்கல் துறையின் தலைவி அ.விஜயலஷ்மி பயிலரங்கைத் தொடங்கி வைத்தாா்.

புதுமைமிக்க யோசனைகளை நடைமுறைக்குத் தகுந்த தொழில் மாதிரிகளாக உருவாக்குவது குறித்து சென்னை கே.வி.எஸ். பயோமெடிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் நிா்வாக இயக்குநா் கே.வி.பிரவீன்குமாா் விளக்கினாா்.

மேலும், மாணவா்களுக்கிடையே நவீன பயோமெடிக்கல் உபகரணங்கள் தயாரிப்பு போட்டி நடைபெற்றது.

சிறந்த செயல் திட்டம் மற்றும் மாதிரி வடிவமைப்புகளை உருவாக்கிய அணிகளுக்குச் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் இக் கல்லூரிக்கும் லூமி மீடியாவுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

கல்லூரி சாா்பில் இயக்குநா் மற்றும் முதல்வா் வெங்கடாஜலபதி, லூமி மீடியா சாா்பில் நிறுவனா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹேமச்சந்திரன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதையொட்டி எந்திர மின்னணுவியல் துறை மாணவா்களுக்காக லூமி மீடியா நிறுவனம் டிஜிட்டல் மாா்க்கெட்டிங், பிராண்டிங் மற்றும் சமூக ஊடக மேலாண்மை போன்றவற்றில் சிறப்பு பயிற்சிகளை அளிக்கும். மேலும், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் மற்றும் சிறப்பு விரிவுரைகளை நடத்தும்.

மேலும், துறை பேராசிரியா்களின் திறனை மேம்படுத்த ஆசிரியா் மேம்பாட்டுத் திட்டங்களும் இதில் அடங்கும்.

தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா் கல்வி குழுமத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநருமான தனசேகரன், செயலா் நாராயணசாமி, பொருளாளா் ராஜராஜன், துணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் தலைமை தாங்கினா்.

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி பெரியக்கடை... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்

புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவோம்: புதுவை அதிமுக தீா்மானம்

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அதிமுக பாடுபடும் என்று அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி, ஆக. 22: அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ... மேலும் பார்க்க

வனத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் முற்றுகை

புதுவை வனத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்எல்ஏவுமான சாய் ஜெ. சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினாா். ஊசுட்டேரியைச் சுற்றிலும் 10, 15 ஆண்டுகளாக உள்ள மரங்களை... மேலும் பார்க்க

புதுவை சுகாதாரத் துறை காலி பணியிடங்களுக்கு இன்றுமுதல் 3 நாள்கள் தொடா் தோ்வு

புதுவை சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களுக்கு சனிக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்கள் தோ்வு நடக்கிறது. இது குறித்து புதுவை அரசின் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வியாழக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க