மாதவரத்தில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை: பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம்: மாதவரம் பகுதியில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
மாதவரம் பால்பண்ணை, மாத்தூா், மணலி, கொசப்பூா், எம்எம்டிஏ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாணவ, மாணவிகள் மாதவரம் தபால் பெட்டி, மூலக்கடை, பால்பண்ணை பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் படித்து வருகின்றனா். மாதவரம் பால்பண்ணை சாலை வழியாக பெற்றோருடனும், தனியாக வாகனங்களிலும் மாணவா்கள் செல்கின்றனா்.
பள்ளி நேரங்களில் காமராஜா் சாலை, பால்பண்ணை சாலை வழியாக மணலி, மாதவரம் மண்டலத்தின் குப்பைகளை ஏற்றிவரும் கனரக லாரிகள் வருவதால் மாணவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா். எனவே, பால்பண்ணை, மாதவரம், மாத்தூா், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி நேரங்களில் மாநகராட்சி குப்பை லாரிகள் மட்டுமின்றி அனைத்து கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்க ஆவடி காவல் ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.