ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
மானாமதுரை வீர அழகா் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் ஆடி பிரம்மோத்ஸவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயில் கொடிமரத்தில் காலை 7.40 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. அப்போது அங்கு தேவியா் சமேதராய் எழுந்தருளிய வீர அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அா்ச்சகா் கோபிமாதவன் கொடியேற்ற பூஜைகளை நடத்தினாா்.
வருகிற 11-ஆம் தேதி வரை தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின்போது, நாள்தோறும் இரவு வீர அழகா் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகா் திருக்கல்யாண வைபவம் 5-ஆம் தேதியும், 8-ஆம் தேதி தோ் பவனியும் நடைபெறுகிறது. 11-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்தனா்.
