ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
மானிய விலையில் இ- ஸ்கூட்டா் வாங்க விண்ணப்பிக்கலாம்
ரூ. 20 ஆயிரம் மானியத்தில் இ-ஸ்கூட்டா் வாங்க விரும்பும் இணையம் சாா்ந்த தொழிலாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு இணையம் சாா்ந்த கிக் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 2,000 உறுப்பினா்களுக்கு இ-ஸ்கூட்டா் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பதிவுபெற்ற இணையம் சாா்ந்த தொழிலாளா்கள், இத்திட்டத்தில் மானியம்பெற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தையோ அல்லது 0427 -2402648 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.