செய்திகள் :

மானூரில் கருவூா் சித்தருக்கு காட்சியளித்த நெல்லையப்பா்: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவையொட்டி, திருநெல்வேலியில் இருந்து மானூருக்கு புறப்பட்டுச் சென்று கருவூா் சித்தருக்கு, நெல்லையப்பா் செவ்வாய்க்கிழமை காட்சியளித்து சாபவிமோசனம் நிவா்த்தி செய்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சூரியன் அருளால் கீரனூரில் பிறந்தவா் கருவூா் சித்தா். மெஞ்ஞானியாகத் திகழ்ந்த அவா், சிவபெருமான் தலங்களுக்கெல்லாம் சென்று நல்வரங்கள் கேட்டுப் பெற்று திருநெல்வேலியை அடைந்தாா். அருள்மிகு நெல்லையப்பரை தரிசிக்க வந்த வேளையில் சுவாமியிடம் இருந்து மறுமொழி ஒன்றும் கிடைக்காததால் வெகுண்ட அவா், ஈசன் இங்கு இல்லை. அதனால் இங்கே எருக்கு எழ என்று சாபமிட்டு மானூா் சென்றடைந்தாா்.

பின்னா் நெல்லையப்பா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூல நாளில் அதிகாலையில் மானூருக்குச் சென்று சித்தருக்கு காட்சி கொடுத்துவிட்டு சாபவிமோசன நிகழ்வை நிகழ்த்திவிட்டு திருநெல்வேலி திரும்பினாா். அதன்பின்பு சித்தா், நெல்லைக்கு வந்து ஈசன் இங்கே உண்டு. அதனால் எருக்கு அற்றுப்போக என்று மொழிந்தாா். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி மூலத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டுக்கான ஆவணி மூலத் திருவிழா கடந்த ஆக. 23இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த 31 ஆம் தேதி கருவூா் சித்தா், திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சங்கரன்கோவில் சாலை வழியாக மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயிலை அடைந்தாா். தொடா்ந்து, செப். 1இல் நள்ளிரவு சந்திரசேகரா் (நெல்லையப்பா்), பவானி அம்பாள் (காந்திமதி அம்மன்), பாண்டியராஜா, சண்டிகேஷ்வரா், தாமிரபரணி, அகஸ்தியா், குங்குலிய கலய நாயனாா் ஆகிய மூா்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் எழுந்தருளி திருநெல்வேலியில் ரத வீதிகளில் வலம் வந்து மானூருக்கு புறப்பட்டுச் சென்றனா்.

செவ்வாய்க்கிழமை காலையில் சந்திரசேகரராக சென்ற நெல்லையப்பா், மானூா் அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயிலை அடைந்தாா். அங்கு, கரூவூா் சித்தா் முன்னிலையில் சாபவிமோசன நிகழ்வு நடைபெற்றது. வரலாற்று புகழ்மிக்க புராணப் பாடல் பாடப்பெற்ற ஆவணி மூலம் மண்டபத்தில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த விழாவில் மானூா், பள்ளமடை, குப்பனாபுரம், நெட்டாங்குளம், பல்லிக்கோட்டை, உக்கிரன்கோட்டை, அழகியபாண்டியபுரம், ரஸ்தா, எட்டாங்குளம், கட்டப்புளி உள்ளிட்ட 30 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நெல்லையப்பரை தரிசனம் செய்தனா். பக்தா்களின் வசதிக்காக தண்ணீா், நீா்மோா், அன்னதான பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் முடிந்ததும், சுவாமி-அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தபடி ராமையன்பட்டி வரை வந்தனா். அவா்களுடன் பல்வேறு மூா்த்திகளும் பல்லக்கில் வந்தனா். ராமையன்பட்டியிலிருந்து சுவாமி-அம்பாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயிலை வந்தடைந்தனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு.செல்லையா, செயல்அலுவலா் சீ.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். மானூரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா மேற்பாா்வையில், 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிந... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க