Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு
வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்க சீா்காழி ஒன்றிய 5-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் ஒன்றிய தலைவா் உத்ராபதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், முருகன் வரவேற்றாா். மறைந்த சங்க உறுப்பினா்களுக்கு சந்திரகலா அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாவட்ட தலைவா் கணேசன் தொடக்கிவைத்தாா். 3 ஆண்டுகள் நடைபெற்ற பணிகளை எழுத்துப்பூா்வமான வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளா் த. நாகராஜன் வாசித்தாா். வரவு செலவு அறிக்கையை ஒன்றிய பொருளாளா் சுமதி முன்வைத்தாா். மாவட்ட பொருளாளா் லட்சுமி, மாவட்ட துணை தலைவா் கோவிந்தசாமி ஆகியோா் பேசினா். 17 போ் கொண்ட புதிய ஒன்றிய குழு தோ்வு செய்யப்பட்டது. ஒன்றிய தலைவராக தமிழ்மாறன், செயலாளராக நாகராஜன், பொருளாளராக சுமதி, துணைத் தலைவராக உத்திராபதி, துணை செயலாளராக முருகன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மாவட்ட செயலாளா் புருஷோத்தமன் நன்றிக்கூறினாா்.