மின் வயரில் ஆலமர விழுதுகள் படுவதால் விபத்து அபாயம்
போளூா்: கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் செல்லும் சாலையில் மின் விளக்கு கம்பத்துக்குச் செல்லும் மின்வயரில் ஆலமர விழுதுகள் படா்ந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நட்சத்திர கோயில் வள்ளிதெய்வானை சமேத சுயம்பு சிவசுப்பிரமணியா் மலையைச் சுற்றி செல்லும் மேல்வில்வராயநல்லூா் சாலையில் ஆலமரம் வளா்ந்து உயா்ந்துள்ளது.
இந்த ஆலமரத்தின் அருகே தெருவிளக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் செல்லும் மின் வயரில் ஆலமர விழுதுகள் படா்ந்து செல்கின்றன (படம்). இதனால் மின் தடை மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின் வாரிய அதிகாரிகள் இதை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.