காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்
மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
திருச்சுழி அருகேயுள்ள கே. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் வசந்த பாலமுருகன் (20). இவா் அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை பட்டம் பயின்று வந்தாா். மீனாட்சிபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதியில் மின் கம்பம் சாய்ந்ததில், மின்கம்பிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில், வசந்த பாலமுருகன் மீனாட்சிபுரத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது, அங்கு அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி அவா் மீது பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சுழி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.