நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள...
முதல்வரிடம் நலம் விசாரித்த மு.க. அழகிரி!
முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க அவரது மூத்த சகோதரர் மு.க. அழகிரி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் முதல்வர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் சில நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் மோடி உள்பட பலரும் முதல்வரை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க. அழகிரி இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னை அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வரிடம் நலம் விசாரித்தார்.