நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள...
முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை எப்படி இருக்கிறது? - உதயநிதி பேட்டி
முதல்வர் நலமாக இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை பற்றி பேசுகையில்,
"முதல்வர் நலமாக இருக்கிறார். இன்று காலை சில பரிசோதனைகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அதற்கான அறிக்கையை கொடுப்பார்கள். நேற்று மருத்துவமனையில் இருந்து அறிக்கை கொடுத்துள்ளார்கள். 3 நாள்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள். முதல்வர் விரைவில் குணமடைந்து வந்துவிடுவார்" என்று தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்படவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.