மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
முத்தரையா்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
முத்தரையா் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் வீர முத்தரையா் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சி ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நிறுவனத் தலைவா் சி. கருப்பையா முத்தரையா் தலைமை வகித்தாா்.
இதில், முத்தரையா்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 29 பிரிவுகளாக உள்ள முத்தரையா் சமூக மக்களை ஒரே இனப்பிரிவின் கீழ் கொண்டு வந்து ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
நீதிபதி மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பணியிடங்களில் முத்தரையா்களை நியமிக்க வேண்டும். பெரும்பிடுகு முத்தரையா் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். புதுக்கோட்டை நகரில் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.